தேசியத் தலைவரினால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு தற்போது பலம் பெற்ற பெரும் அரசியல் சக்தியாக ம

இலங்கையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மாவட்ட ரீதியாக 14 ஆசனங்களைக் கைப்பற்றி, மூன்றாவது பெரும் கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவெடுத்துள்ளது.

மாவட்ட ரீதியாக யாழ்ப்பாணத்தில் 5, வன்னியில் 4, மட்டக்களப்பில் 3 , திருகோணமலை மற்றும் அம்பாறையில் தலா 1 என மொத்தம் 14 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியிருக்கிறது.

ஐதேக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு அடுத்து, மாவட்ட ரீதியாக அதிக ஆசனங்களை வென்ற கட்சியாக கூட்டமைப்பு உருவெடுத்துள்ளது.

மேலும், தேசியப் பட்டியலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு ஆசனம் கிடைப்பது உறுதி என்பதால், வரும் நாடாளுமன்றத்தில் குறைந்த்து 15 ஆசனங்களைக் கொண்ட கட்சியாக கூட்டமைப்பு திகழும்.

அதேவேளை, கூட்டமைப்புக்கு கிடைத்துள்ள வாக்குகளின் அடிப்படையில், இரண்டாவது தேசியப் பட்டியல் ஆசனம் கிடைக்கக் கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவ்வாறு இரண்டாவது தேசியப் பட்டியல் ஆசனம் கிடைத்தால், கூட்டமைப்பில் பலம் 16 ஆக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

மட்டு - அம்பாறை மாவட்ட க.பொ.த (சா/த) பரீட்சை முடிவுகள் (முழு விபரம் உள்ளே)

Read More