திருமலையில் ஹெரோயின் விற்பனை செய்த பெண்ணுக்கு 3 வருட சிறை

திருகோணமலை பிரதேசத்தில் ஹெரோயின் விற்பனை செய்த பெண்னொருவருக்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை மூன்று வருடம் சிறைத் தண்டனை விதித்தது.


கடந்த 2007ஆம் ஆண்டு காலப் பகுதியில் திருகோணமலை, லவ்லேன் பகுதியில் ஹெரொயின் விற்பனை செய்த போது இவர் கைது செய்யப்பட்டார்.

குறித்த சந்தேக நபருக்கு எதிராக திருகோணமலை உயர் நீதிமன்றில் நடைபெற்று வந்த வழக்கின் போது இவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டார்.

இதனையடுத்து மேல் நீதிமன்ற நீதிபதி பா. சசி மகேந்திரன் இவருக்கு மூன்று வருட  சிறைத் தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் தண்டப் பணமும் விதித்தார்.

தண்டப் பணத்தினை செலுத்தாத பட்சத்தில் மேலும் ஆறு மாதம் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டி எற்படும் என நீதிபதி உத்தரவிட்டார்.

சம்பூரில் பசுமை எரிசக்தி திட்டமாக பயன்படுத்த முடியாதா?

Read More