வீரமுனை படுகொலை நினைவு தினம் அனுஸ்டிப்பு

அம்பாறை மாவட்டத்தின் வீரமுனையில் 1990-08-12ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டவர்களின் 25ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, ஆலயத்துக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
புதன்கிழமை மாலை இடம்பெற்ற இந் நிகழ்வில் ஆலய பரிபாலன சபையினர், உயிர் நீத்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதனை முன்னிட்டு இன்று வீரமுனை சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயத்தின் விசேட பூஜை நிகழ்வுகள் நடைபெற்றன. இதில் பெருமளவான உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

1990ஆண்டு ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின்போது வீரமுனை கிராமத்தினை சூழவுள்ள வளத்தாப்பிட்டி, மல்வத்தை, மல்லிகைதீவு, வீரச்சோலை, அம்பாறை ஆகிய பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்கள் வீரமுனை இராம கிருஸ்ண மிசன் வித்தியாலயம், வீரமுனை சிந்தாயாத்திரைபிள்ளையார் ஆலயம் மற்றும் கண்ணகியம்மன் ஆலயம் என்பனவற்றில் தஞ்சமடைந்திருந்தனர்.

1990-08-12ஆம் திகதி இந்த அகதி முகாம்களுக்குள் புகுந்த இராணுவத்தினரும் முஸ்லிம் ஊர்காவல் படையினரும் நடத்திய தாக்குதல்கள் காரணமாக 95க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 20க்கும் மேற்பட்டோர் காணாமல்போயினர்.

இதனை முன்னிட்டு வீரமுனை மக்கள் ஆண்டுதோறும் அனுஸ்டித்து வருகின்றனர். 90ஆம் ஆண்டு காலப்பகுதியில் வீரமுனையில் தஞ்சமடைந்திருந்த சுமார் 200க்கும் மேற்பட்டோர் கடத்தப்பட்டும் படுகொலை செய்யப்பட்டுமிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அம்பாறை மாவட்டம் தவிர்ந்த வடகிழக்கின் இணைப்பே காலத்தின் தேவை

Read More