"மக்களே வாக்களிப்பது உங்கள் கடமை" மட்டக்களப்பில் விழிப்புணர்வுப் பணி ஆரம்பம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிப்பு வீதத்தினை அதிகரிக்க செய்யும் வகையிலான விழிப்புணர்வு நடவடிக்கையொன்றை கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கம் மேற்கொண்டுவருகின்றது.
மக்களே வாக்களிப்பது உங்கள் கடமை என்னும் தலைப்பில் துண்டுப்பிரசுரங்களை வழங்கி இந்த போராட்டத்தினை முன்னெடுத்துவருகின்றனர். இதன்நிகழ்வு நேற்று மாலை மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில் நடைபெற்றது.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளரும் கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்க உறுப்பினருமான கே.சங்கர் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது வாக்களிப்பினை வலியுறுத்தி துண்டுப்பிரசுரங்களும் வழங்கிவைக்கப்பட்டன.

கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிப்பு வீதம் மிகவும் குறைந்த நிலையில் உள்ளதாகவும் அவற்றினை அதிகரிக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருவதாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளரும் கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்க உறுப்பினருமான கே.சங்கர் தெரிவித்தார்.

2010ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிப்பு வீதம் மிகவும் குறைந்த அளவிலேயே இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

43வீதமானோர் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2010ஆம்ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்கவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

தேர்தலில் வாக்களிப்பது வாக்காளர்களின் உரிமையென்பதுடன் அவர்களின் கடமையெனவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிக்க தகுதிபெற்ற அனைவரும் வாக்களிக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.

சம்பூரில் மைத்திரிபால- சந்திரிகா- சம்பந்தன் கூட்டணி பேசியது என்ன?

Read More