பிள்ளையான் குழுவின் அச்சுறுத்தலால் ஆரையம்பதி TNA கூட்டம் நிறுத்தம் (படம் இணைப்பு)

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பிரச்சாரக்கூட்டம் 13.08.2015 அன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இதனை குழப்புவதற்காகபிள்ளையான் ஓட்டுக்குழுவின் முக்கிய கொலையாளியான பிரசாந்தனின் அடியாட்கள் கூட்டத்தினை ஒழுங்கு செய்தவர்களின் வீட்டுக்குச் சென்று அவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள்.

சபாரெத்தினம்(கூட்டத்தினை தலைமை தங்குபவர்) கூட்டத்தினை ஒழுங்குசெய்தவர்களின் ஒருவரான   கூட்டத்தின்சிறப்பு பேச்சாளர் குருநாதன் மற்றும் கூட்டம் நடத்துவதற்கு காணி வழங்கியவர் இவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது

இது சம்பந்தமாக பொலிஸ் மற்றும் தேர்தல் கண்காணிப்புகுழுவில் முறைப்பாடு செய்ய்ப்பட்டுக்ளது.இக் கொலை அச்சுறுத்தல் விடுத்த பிரசாந்தன் குழுவின் அடியாட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சாமித்தம்பி சிவசுந்தரம்(குஞ்சுராசா) அமரசிங்கம் வீதி ஆரையம்பதி மற்றையவர் இராசையா குட்டி காங்கேயனோடை வீதி ஆரையம்பதி.இவர்களுடன் மேலும் நான்கு நபர்களும் என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் பிரசாந்தன் குழுவால் அம்மக்கள் அச்சுறுத்தப்பட்டதும் தமிழ் தேசியவாதியான (தமிழ் நாடு)மனோகரன் ஆசிரியர் கொல்லபட்டதும் குறிப்பிடத்தக்கது.

மகிந்தரின் அராஜக வளர்ப்பில் வளந்த பிள்ளையான் குழு அதிலிருந்து மீளவில்லை என்பதை இது எடுத்துக்காட்டுகின்றது .

இப்படியான ஓட்டுக்குழுக்களை எம் மண்ணிலிருந்து விரட்டியடிக்க வேண்டுமென ஆரையம்பதி மக்கள் தெரிவித்தனர்

மட்டக்களப்பில் மழை

Read More