மட்டக்களப்பில் கூட்டமைப்பு வேட்பாளரினால் கொல்லப்பட்ட கல்விமான்கள்(காணொளி)

 
இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கத்தின்  தலைவராக விளங்கிய திரு.DSK.வணசிங்கா 31.03.1989  அன்று மாலை 6. 00 மணியளவில் இரா.துரைரெட்ணம் தலைமையில் மட்டக்களப்பில் இயங்கி வந்த EPRLF.குழுவைச் சேர்ந்த இருவர் அவரது வீட்டில் வைத்து அவரைச்  சுட்டுக்கொன்றனர்.   

அவர் துரோகியல்ல சமுகவிரோதியல்ல தனது வாழ் நாளை ஆயிரக்கணக்கான மாணவர்களோடும் ஆசிரியர்களோடும் கழித்தவர்.எண்ணற்ற கல்விமான்களையும்,நற்பிரஜைகளையும் உருவாக்கியவர்  கனவில் கூட எவருக்குமே தீங்கு நினைக்காதவர். இத்தகைய பெரு மனிதரை  இந்த உலகில் வாழத் தகுதியற்றவர் என்று தீர்மானித்து  தமிழ் ஆசிரியர் உலகத்திற்கும் எமது இனத்திற்கும்  வழி காட்டிய  அந்த தன்னலமற்ற தமிழ்த் தேசியப் பற்றாளரை அழித்தவர்களின் தலைவர்  இரா. துரைரத்தினம்  
 
மக்கள் சேவையை முன்னிறுத்தி செயல்பட்ட பாதர் சந்திரா அவர்களை 06.06.1988 அன்று மட்டக்களப்பு மத்திய வீதியில் அமைந்துள்ள மாதா தேவாலயத்தினுள் வைத்து தமிழ்த் தேசிய விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த EPRLF. என்ற கிழக்கு மண்டையன் குழுவினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். 

அவரின் மக்கள் நலன் சேவை தமிழ்மக்களுக்கு மாத்திரமல்லாது,  அனைத்து இனமக்களுக்கும் சேவை புரிந்த ஒரு நல்ல இதயங்கொண்ட மனிதரை ஏன் அன்று திட்டமிட்டு அழித்தார்கள் என்பதை எமது இன்றையதலைமுறையினரும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் வாக்காளர்களும் அறிய வேண்டும் ..
 
ஆரையம்பதியைச் சேர்ந்த ஆசிரியரும் சமுக சேவையாளருமான  மாசிலாமணி  கனகரத்தினம்     13/05/1988 அன்று   இதே துரைரத்தினம் தலைமையில் EPRLF ஒட்டுக்குழுவால் சுட்டுக்கொல்லப்பட்டர் .
 

 

 

ஆரையம்பதியைச் சேர்ந்த கல்வியலாளரும் சமுக சேவையாளரும்மான இளையதம்பி  கணபதிப்பிள்ளை 27/05/1989, அன்று  இரா .துரைரத்தினம் தலைமையில் இயங்கிய EPRLF. ஒட்டுக்குழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்டர்  
 

 

 

 

இந்திய இராணுவ காலத்தில் மட்டு--காத்தான்குடியைச் சேர்ந்த றிபாயா என்ற முஸ்லிம் யுவதியும் அரசடி வாசியான சுகுணா என்பவரும் சந்தேகத்தின் பேரில் இரா.துரைரத்தினத்தால் அழைத்துச் செல்லப்பட்டனர். தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ( ஈ.பி.ஆர்.எல்.எவ் ) என்ற பெயருடன் இயங்கி வரும் அலுவலகமே அந்நாளில் மண்டையன் குழுவின் சித்திரவதை முகாம். அங்கு தான் இவர்கள் இருவரும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். அதற்கு அவர்களது பெயர் விசாரணை. இவ்விடயத்தை அறிந்த பிரஜைகள் குழுப்பிரமுகரான அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ எடுத்த கடும் முயற்சியின் பலனாக இந்திய இராணுவம் அந்த முகாமுக்குள் செல்ல நேர்ந்தது. அங்கு சுகுணா மட்டும் மயக்கமுற்ற நிலையில் மீட்கப்பட்டார். றிபாயாவைக் காணவில்லை. என்ன நடந்தது என்பது பற்றி இன்று வரை தெரியவில்லை. வலையிறவுப் பகுதியில் அவர் புதைக்கப்பட்டதாக ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல். சுகுணா தற்போது வெளிநாடொன்றில் தஞ்சமடைந்துள்ளார். ஆனாலும் அந்த நாளைப் பற்றிய கொடூர நினைவுகள் அவரை விட்டு மறையவில்லை.

கடந்த 2009 ஆண்டு மே 18 வரை தமிழ்த் தேசியத்திற்கு எதிராக ராணுவப்புலனாய்வாளர்களுடன்  இணைந்து பல  போராளிகளையும் தமிழ்த் தேசியவாதிகளையும்  பொது மக்களையும் கொலை செய்வதற்கு முக்கிய காரண கர்த்தாவாக இருந்தவர்  

அம்பாறை காஞ்சிரங்குடா பகுதியில் கருணா குழுவின் முக்கிய கொலையாளி  இனிய பாரதிக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் படுகாயமடைந்து கொழும்பில் சிகிச்சை பெற்ற பின் பாதுகாப்பாக மட்டக்களப்பிற்கு அழைத்து வந்து தற்போதைய   மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு காரியாலையத்தில் அந்த துரோகியைப்  பாதுகாத்தவர்தான்  இந்த ரெட்ணம்  

தற்பொழுதும் இந்தக்கணம் வரை இவர் மட்டக்களப்பு மாவட்ட உயர் பாதுகாப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு வருகிறார் இக்கூட்டத்தில் பிரிகேடியர்,உயர் பாதுகாப்பு அதிகாரிகள் புலனாய்வாளர்கள் மட்டுமே கலந்து கொள்வதுண்டு கடந்த காலத்தில் ராணுவக்கொடுப்பனவு தேசிய சேமிப்பு வங்கிக் கணக்கூடாக வழங்கப்பட்டது 

பின்னர் இவர் மாகாண சபை உறுப்பினரான பின்பு அது நிறுத்தப்பட்டது(ஒரு அரச அதிகாரி இரு கொடுப்பனவுகள் பெற முடியாது என்பதால் நிறுத்தப்பட்டது) இப்படியான இவர் எப்படித் தமிழ்த் தேசியம் பேசப்போகிறார் மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் நின்று தேசியம் சுயநிர்ணய உரிமை தன்னாட்சி பற்றி இவர் மட்டக்களப்பு  மக்களுக்கு முன் பேசுவாரா ?.... அல்லது சிங்கள அரசுடன்  பேசுவாரா  ?... இவை இரண்டுமே நடைபெறப்போவதில்லை 

 இன்று வழிப்போக்கர்கள் தேசியம் என்ற சொல்லாடலை கையில் எடுத்திருக்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்  2009  க்கு பின்பும் ராணுவப் புலனாய்வாளர்களுடன் சேர்ந்து இயங்கி வரும் இவருக்கு எப்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட முடிந்தது கட்சித் தலைவருக்கோ அல்லது செயலாளர் துரைராஜசிங்கத்துக்கோ இவை அனைத்தும் தெரிந்திருக்கவில்லையா அல்லது ....

09/08/2015 அன்று  ஆரையம்பதி மக்களே ஏன் தேசவிரோதிகளுக்கும் கொலைகாரர்களுக்கும் கூட்டமைப்பில் போட்டியிட இடம் கொடுத்தீர்கள் என்று கேட்டு இளைஞர்களால் மற்றும் மாவீரர் குடும்பத்தினரால்  இவரை முற்றுகை இட்ட போது கட்சியின் உப தலைவர் நவம் அண்ணன் ஆரையம்பதி மக்கள் முன்னாள் கை  கட்டி தலைகுனிந்து நின்றார் 

இதே போன்று மட்டக்களப்பு மக்கள் மத்தியில் நீங்களும் தலை குனிந்து நிற்பீர்கள்  என்பதில்  ஐயமில்லை 
எனவே யாராக இருந்தாலும்  தியாகத்துடன் விளையாட வேண்டாம் இந்தத் தீ பல உன்னதமான உயிர்களினால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும்  அப்படி விளையாட எத்தனிப்பீர்களேயானால் இத்தீயினால் நீங்களும் ?...
எனவே மட்டக்களப்பு மக்களே தமிழ்த் தேசியம் என்ற முகமூடி அணிந்து தேசிய வாதியாக சிங்கள கைக்கூலி ஒன்று உங்களிடம் வாக்கு கேட்டு வந்துள்ளான்

வீரம் விளைநிலத்தில் பிறந்த நாம் இந்த சிங்களக் கைக்கூலியான துரைரெட்ணத்தை தோற்கடிப்போம் 

                                                                   "தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"  

வைரவர் வழிபாடு

Read More