செங்கலடியில் 2500 முஸ்லீம் குடியேற்றம்!

செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவில் 2500 முஸ்லீம் குடும்பங்களை குடியேற்ற  அவசர அவசரமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு  வருகின்றன.

 

2500 முஸ்லீம் குடும்பங்களு செங்கலடி பிரதேசத்தில் குடியேற்ற அலிசாகீர் மௌலானா மற்றும் சுபைர் அமீர் அலி ஆகியோர் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றமை தெரியவந்துள்ளது.

குறித்த குடியேற்றத்திற்கு இவ்வளவு காலமும் தடையாக இருந்த செங்கலடி பிரதேச செயலாளரை இடமாற்றிய முஸ்லீம் தலமைகள் உடனடியாக குடியேற்ற நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். 

 

குறித்த குடியேற்றத்திற்கு தளவாய் தமிழ் பிரதேசத்தில்  காணி வழங்குமாறு பிரதேசசெயலாளருக்கு கோரிக்கை முன்வைத்த போது தளவாயில் உள்ள குறித்த காணியை வழங்க அவர் மறுத்துள்ளார். 

 

எனவே அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என முதலமைச்சர்  அலிசாகீர் மௌலானா மற்றும் சுபைர் அமீர் அலி ஆகியோர் அரசாங்க அதிபரின் ஊடாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளனர். 

 

இதில் மௌலானாவுடன் இணைந்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் கடிதம் எழுதி கொடுத்துள்ளமை தெரிய வந்துள்ளது. 

இதே நேரம் கரையோர அபிவிருத்தி திட்டத்திற்கு காணி வழங்க மறுத்ததாக கூறியே செங்கலடி மற்றும் வாகரை பிரதேச செயலாளர்களை அரசாங்க அதிபர் விசாரணை என்ற போர்வையில் இடமாற்றி உள்ளமை தெரியவந்துள்ளது.

அவர்கள்  இடமாற்றம் செய்யப்பட்ட பின்னர் வாகரை பிரதேசத்தில் இருந்து 1100 ஏக்கர் காணியும் செங்கலடி பிரதேசத்தில் இருந்து 110 ஏக்கர் காணியும் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

 

மட்டக்களப்பு மாவட்ட அரச நிர்வாக விடயத்தில் நல்லாட்சி அரசாங்கம் மகிந்த ராஜபக்ஷ அரசின் பாணியிலேயே செயற்பட்டு வருகிறது என்பதற்கு இரண்டு பிரதேச செயலாளர்களின் இடமாற்றமே சாட்சியாக அமைந்துள்ளது. 

அத்தோடு மட்டக்களப்பு மாவட்டத்தில் கரையோர பிரதேசங்களை இலக்கு வைத்து குடியேற்றங்களை செய்து வரும் முஸ்லீம் தலைவர்கள் தற்போது சுற்றுலா அபிவிருத்தி என்ற போர்வையில் சவுக்கடி தளவாய் பகுதியில் பெரும் நிலப்பரப்பில் பூங்கா ஒன்றை அமைக்க முதலமைச்சர் ஹபிஸ் நசீர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். 

இவற்றுக்கு தடையாக உள்ளவர்களை

நம் கையைக் கொண்டு நம்மையே  வெட்டுகின்ற செயற்பாடுகளை முஸ்லீம் தலைவர்கள் செய்துள்ளனர்.  அதற்கு நமது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் துணை போயுள்ளார் என்றால் இதை விட கேவலம் தமிழனுக்கு என்ன வேண்டும்.

  எட்டப்பனாய் மாறிய பச்சோந்தி EPRLF, தோழர் துரைரெட்ணம்

Read More