முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் முதலாவது ஆவணப்படம் வெளியீட்டு வைக்கப்படவுள்ளது.

உலகத்தமிழர்களினதும்,இலங்கைத் தமிழர்களின் அடையாளச் சின்னமாகவும்,இருப்பாகவும் திகழ்ந்தவர்தான் உயர்பண்பாளர் சுவாமி விபுலானந்தர்."உள்ளக்கமலமடி உத்தமனார் வேண்டுவது "எனும் பாடல்மூலம் மட்டக்களப்பு மண்ணுக்கு பெருமை சேர்த்தவர் விபுலானந்தர் ஆவார்.இவரின் வாழ்க்கை வரலாற்றையும்,கல்விச்செயற்பாட்டையும், இவரது நல்லிணக்கத்தையும் வைத்துக்கொண்டு
அரங்கம் நிறுவனத்தினால் தொகுக்கப்பட்ட முத்தமிழ் வித்தகர்  சுவாமி விபுலானந்தரின் முதலாவது ஆவணப்படம் எதிர்வரும் வியாழக்கிழமை(20.7.2017)  மாலை 6.30 மணியளவில் மட்டக்களப்பு மாமாங்கம் ஆலய முன்றலில் நடைபெறவுள்ளதாக மூத்த ஊடகவியலாளரும்.பீ.பீ.சீ செய்தித்தளத்தின் செய்தி ஆசிரியருமான பூபாலரெட்ணம் சீவகன் தெரிவித்தார்.இது சம்பந்தமாக ஊடகவியலாளர்களை  தெளிவூட்டும் ஊடக சந்திப்பு மட்டக்களப்பு மாவட்ட தகவல் திணைக்கள உத்தியோகஸ்தர் எல்.தேவஅதிரன் அவர்களின் ஒழுங்கமைப்பில் கல்லடி வொய்ஸ் மீடியா நிறுவனத்தில்  ஞாயிற்றுக்கிழமை(16.7.2017) பிற்பகல் 3.30 மணியளவில்  நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாபு-வசந்தகுமார், கந்தையா-தருமேந்திரன்,திருமதி பரமேஸ்வரி-சீவகன், மற்றும்  ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டார்கள்.இதனை தயாரித்தவர் சிவானந்தா பழைய மாணவன் தம்பிராசா பாபு வசந்தகுமார் ஆவார்.

  

  

  

  

  

வீதியை மறித்து கிழக்குப் பல்கலைக்கழ மாணவர்கள் ஆர்ப்பட்டம்!

Read More