மாவில்லாறில் சோகம்

மாவில்லாறு குளத்தில் தோணி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

குருநாகல் - கெக்குனுகொல்ல அரக்கியால ரவ்லத்துல் ஹாபிழீன் அரபிக்கல்லூரி மாணவர்கள் இருவரே இதன்போது உயிரிழந்துள்ளனர்.

அரபிக்கல்லூரி மாணவர்கள் மூதூரில் நடைபெற்ற திருமண வீடொன்றுக்கு வருகை தந்து மாவிலாறு குளத்தைப் பார்வையிட தோணியில் சென்ற போதே தோணி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது கெக்குனுகொல்ல-அரக்கியால பகுதியைச் சேர்ந்த 11 வயதுடைய எம்.என்.எம்.அப்துல்லாஹ் மற்றும் 18 வயதுடைய எம்.எச்.எம்.அப்துல்லாஹ் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இரு மாணவர்களின் சடலங்களும், சேருநுவர பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  

  

கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்த்த சாதனை படைத்துள்ள அணி

Read More