திருகோணமலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

திருகோணமலை - குச்சவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இறக்கக்கண்டி பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் இன்று மீட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு, களனிப் பகுதியிலிருந்து இறக்கக்கண்டிக்கு தொழிலுக்காக சென்று ஜயந்த செனவிரட்ன என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலும், இவர் உயிரிழந்தமைக்கான காரணம் தெரியவரவில்லை என்பதுடன், இது தொடர்பில் குச்சவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பூர் அனல்மின் நிலையப் பணிகளை இடைநிறுத்தக் கோரி அடையாள உண்ணாவிரதப் போராட்டம்

Read More