வெளிநாட்டு வாழ்க்கை.

கடல் கடந்து வந்து விட்டேன் கடல் கடந்து
வருடங்கள் முடிகிறது கடல் கடந்தாலும்
மறக்க முடியவில்லை சில நினைவுகள்.

தனிமையில் எழும் சோகமும் கூட உறங்கும்
தலையணை மட்டும் அறியும் சொல்லியழ
யாரும் இல்லை யாரும் இல்லை நான்கு

சுவற்றுக்குள் அடங்கி கிடக்கிறது சோகம்
ராஜா வாழ்க்கை என்று எதிர்பார்த்து வந்தேன் ராஜா வேஷத்திற்குக்கூட

இடமில்லை இங்கு வட்டிக்கு வாங்கி வந்த
கடன் கூட முடியவில்லை இன்னும் நாளுக்கு நாள் வட்டியும் எறிக்கொண்டு போகிறது

கைநிறைய உழைத்தாலும் கையில் தங்குவதில்லை சில காசு அதை அனுப்பினாலும் வட்டிக் காரனிற்கு முடிகிறது

குடும்பச் சுமையை தாங்கி ஆவலுடன் கடல்
கடந்தேன் பிறகுதான் தெரிகிறது குடும்பத்தின் அருமை கூட

உண்ணும் உணவு கூட ருசிக்கு சாப்பிட
வில்லை பசிக்கு மட்டுமே உண்கிறோம்
இங்கு

நல்லது கெட்டது எல்லாம் ஒரு கையடக்க
தொலைபேசியில் முடிகிறது வாழ்க்கை ஊர்
புதினமும் ஊர் சந்தோஷங்களையும்

தொலைபேசியில் பார்த்து மகிழ்ந்தாலும்
நேரில் பார்ப்பது போல் வருமா.?

வீட்டில் அமர்ந்து கொண்டு நேரத்திற்கு நேரம்
ஊர் சுத்தி வரும் போது அம்மா சமைத்து
வைத்த சாதத்தை சாப்பிடும் போது தெரியவில்லை அதன் அருமை

இங்கு கம்பெனியில் அவன் தரும் அளவுச் சாப்பாட்டை சாப்பிடும்போது தான் அம்மாவின் கை அருமை விளங்குகிறது

ஏழையாக பிறந்தது என் விதியா.?
இல்லை கடல் கடந்தது வந்தது என் விதியா.?

கரை தொடும் அலைகள் நுரை வரை முடிவது
இல்லை அதைபோல் தான் இங்கு நாள் தோறும் வேலையாக வாழ்கிறோம்

என்னைப்போல் எத்தனை இழைஞர்கள்
வாழ்கிறார்கள்  தன் இழைமையை தொலைத்து விட்டு தன் குடும்பச் சுமையை

சுமந்து சொல்ல முடியாத வலிகளுடன் அடிமையாக றியாலிற்கு வாழ்க்கையை
அடகு வைத்து விட்டு இங்கு வாழ்கிறார்கள்

கைபேசியில் எமது அழகான புகைப்படம்
பார்ப்பவர்களுக்கு விளங்கிடாது நாம்
இங்கு படும் துன்பங்கள்

ஐந்து ரூபாய் உழைத்தாலும் நம் ஊரோடு
குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கலாம்

இங்கு பத்து ரூபா உழைத்தாலும் தனிமையில் அந்தப் பணத்தை வைத்து சந்தோஷமாய் இங்கு வாழ்ந்து விட முடியுமா?

உனக்கென்ன தம்பி வெளிநாட்டு காசு தானே என்பார்கள்  சிரித்தபடியே
நகர்கிறது வாழ்க்கை இங்கு.

எழுதிய வரிகள் சிலருக்கு கவிதையாக
இருக்கலாம்  அதில் எவ்வளவு உப்பு இருக்கிறது என்று ஆழமாக படித்து பாருங்கள்

இத்துடன் முடிக்கின்றேன்
எனது மடலை

இப்படிக்கு - நிதா கரன் கதிகரன்.

  

  

இளநீரில் தேன் கலந்து அருந்துங்கள் ; உங்கள் உடலில் ஏற்படும் அதிசயம்

Read More