சவுதியில் இலங்கைப் பணியாளர்கள் தங்கியிருக்கும் பகுதியில் தீ ; 10 பேர் பலி

வளைகுடா நாடான சவூதி அரேபியாவில் இந்தியா, வங்காளதேசம், இலங்கை போன்ற தெற்காசியாவிலிருந்து அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். நஜ்ரான் என்ற பகுதியில் வெளிநாட்டு தொழிலாளர்கள் தனியாக வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் ஏ.சி. இயந்திரத்திலிருந்து தீடீரென மின்கசிவு காரணமாக தீப்பற்றியது. இதையடுத்து, வீடு முழுவதும் தீ பரவியது. இந்த கோர விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 10 தொழிலாளர்கள் மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், 6 இந்தியர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீயை அணைக்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளதாகவும், தீ விபத்து தொடர்பாக விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் நஜ்ரன் மாகாண கவர்னர் தெரிவித்துள்ளார். பலியானவர்களின் விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

தீ விபத்து குறித்து கவலை தெரிவித்துள்ள மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஸ், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிளையும் தூதரகம் செய்யும் என தெரிவித்துள்ளார்.

மெல்பேர்ன் கேணல் கிட்டு ஞாபகார்த்த ”தமிழர் விளையாட்டு விழா

Read More