புலம்பெயர் மனித உரிமை செயற்பாட்டாளர்களின் மனுவினை ஏற்க மறுத்த இந்திய தூதராலய அதிகாரி.

மே18 தமிழின அழிப்பு நாள் நினைவேந்தல் நிகழ்வினை 21.05.2017 அன்று தமிழ்நாட்டின் தமிழர் கடற்கரை மரினாவில் அனுஸ்ரிக்க முயன்ற மே 17 இயக்க தோழர் மற்றும் ஏனைய தோழர்கள் தொடர்பில்
கடந்த  (23.06.2017) வெள்ளிக்கிழமை இந்தியாவின் ஐக்கிய நாடுகள் சபைக்கான வதிவிடப்பிரதிநிதியிடம் சுவிச்சர்லாந்து நாட்டினை சேர்ந்த தமிழ் அமைப்புக்களின் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தமிழ்நாட்டினை சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர் திருமுருகன் காந்தி மற்றும் மூன்று தோழர்களின் மீது அவசியமற்ற கைது தொடர்பான அதிர்ப்தியினையும் அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை இந்திய பிரதிநிதியிடம் கையளிக்க முற்பட்ட போது அவர்கள் அதனை நிராகரித்ததுடன் அதனை ஏற்க மறுத்து உதாசீனமாக செய்துள்ளனர்.  

அதனை அடுத்து மனித உரிமைகள் சபையின் 47 நாடுகள் அங்கம்வகிக்கும் உறுப்புரிமை சபையின் தலைவரிடமும் இவர்களது சட்டவிரோதமான கைது தொடர்பான மனு கையளிக்கப்பட்டது அவர் அந்த மனுவினை கவனத்தில் கொள்வதாகவும் அவரை ஐநாசபையின் பிரத்தியோக அறையில் சந்திப்பதற்கான தனது கால அட்டவணையினையும் தமிழ் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு வழங்கியுள்ளார்.

 

  

  

3 பேரின் அருவருக்கத்தக்க செயலால் ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கு கெட்ட பெயர்

Read More