இன ஐக்கியம் என்ற போர்வைக்குள் காணாமல் போகும் தமிழ்தேசியம்.

 ( தூயவன் )இலங்கைத் தீவுக்குள் நிரந்தர தீர்வும், சகவாழ்வு நிலையும் ஏற்பட வேண்டுமாயின் இன ஐக்கியம் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்ற சிந்தனைவாதம் யதார்த்தமானதுதான்.  ஆனால் மூவினங்கள் மத்தியிலும் சந்தேகத்துக்கு இடமின்றி அதற்கான உண்மையானதும், நேர்மையானதும், வெளிப்படையானதுமான நல்லெண்ண செயல்முறைகள் கட்டியெழுப்பப்பட வேண்டும்.


நடந்து முடிந்த யுத்தம் தமிழ், சிங்கள இனத்தவர்களிடையே இன்னமும் முரண்பாட்டு இடைவெளியை பேணிவருவதுடன் குறைந்தமைக்கான எந்தவிதமான ஏதுநிலைகளையும் காணமுடியவில்லை.

தமிழ், முஸ்லீம் இனங்கள் வரலாற்று ரீதியாக சகவாழ்வு சமூகங்களாக இருந்த போதும் யுத்தத்தின் பின்னரான இன்றைய காலகட்டத்தில் அதன் உண்மையான இயங்கு நிலை மற்றும் அதன் இயக்க சக்திகள் அர்ப்பணிப்புடனான உண்மையான  இன ஐக்கியம் என்ற நேர்கோட்டில் பயணிக்கின்றதா?  என்பது ஆய்வுக்குரிய விடயமே.

தமிழர்கள் போராடிய சமூகம் என்ற அடிப்படையில் தமிழ்தேசியம் என்ற வாழ்வியல்  கோட்பாட்டுக்கு எண்ணற்ற விலை கொடுத்திருக்கின்றார்கள். தொடர்ந்தேர்ச்சியாக அதன் உயிரோட்டம் பேணப்பட வேண்டும் என்ற முனைப்புக்களை களத்திலும், புலத்திலும் முன்னெடுத்து வருகின்றனர்.

இனப்பரம்பல் ரீதியாக வடபுல பிராந்தியத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக செறிந்து வாழ்ந்து வருவதனால் உள்ளக முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள இன்றைய  நிலையிலும் கூட ஏனைய இனத்தவர்கள் அதனை காவுகொள்ள முடியாத தன்மையே காணப்படுகின்றது. ( இது ஆய்வுக்குரிய விடயம் ) ஆனால் கிழக்கு மாகாணத்தின் நிலைமை அப்படியல்ல

இணைந்த வடகிழக்கு என்ற தளத்தில் நின்றுதான் தமிழ் மக்களுடைய நியாயமான அபிலாசைகள் வென்றெடுக்கப்பட வேண்டுமென்பது தமிழர் தரப்பின் ஆதங்கம். ஆனால் கிழக்கு மாகாணத்தில் இன்று மேலோங்கிவரும் முஸ்லீம் அடிப்படை தீவிரவாதம் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை வெண்றெடுப்பதில் பாரிய தடைக் கல்லாகவே காணப்படுகின்றது. வடகிழக்கு மாகாணங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட வேண்டும் என்ற என்ற பேரினவாதிகளின் எண்ணங்கள் ஈடேறுவதற்கு முஸ்லீம் அரசியல்வாதிகள் தமது பலமான பங்களிப்பை கடந்த காலங்களில்  வழங்கியிருக்கின்றார்கள். குறிப்பாக அதாவுல்லாவை இதற்கு  சிறந்த உதாரணமாக கூறமுடியும்

பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில்  இன்று நடந்தேறும் சம்பவங்களெல்லாம் தமிழர்களின் இருப்பு, தனித்துவம், விழுமியங்கள், பண்பாட்டுக்கோலங்கள் என்பவற்றின் எதிர்காலத்தை அச்சுறுத்தலுக்கும், கேள்விக்கும் உள்ளாக்கியுள்ளது என்பதுதான் இன்றைய உண்மை நிலை. இந்த துரதிஸ்ரமான நிலைக்கு மாகாணத்தின் அரசியல் அதிகாரம் முஸ்லீம் தரப்புக்கு தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டமையே அடிப்படைக் காரணியாகவுள்ளது.

அண்மையில் வெற்றிநாதத்தில் திரு. சண்.தவராஜா அவர்கள் தமிழ் தேசியவாதம் இஸ்ஸாத்தை பேரினவாதிகளுடன் இணைந்து விழுங்கிவிடும் என்ற கருப்பொருளில் ஓர் கட்டுரை பதிவினை செய்திருந்தார்.

கட்டுரை பதிவு

(மத நல்லிணக்கம் தவறானதா? சண் தவராஜா! )

திரு.சண் தவராஜா அவர்கள் புலத்தில்  வாழ்ந்து வருவதனால் களநிலைகளை கணிப்பிடுவதில் அவருக்கு சிரமங்கள் இருக்கலாம். ஆனால் அவரின் தொந்த ஊரான ஏறாவூரின் எல்லைக்கோடுகள் சுருங்கிவருவதும், பண்பாட்டு அடையாளங்கள் முஸ்லீம் தரப்பால் விழுங்கி ஏப்பமிடப்பட்டு வருவதையும் இன்றைய தொடர்பாடல் யுகத்தில் அவர் அறியாததல்ல. இது திரு. சண் தவராஜா என்ற தனிமனிதனின் கருத்தாடல்கள் மாத்திரமே தவிர களத்தில் வாழும் கிழக்கு தமிழர்களின் நிலைப்பாடல்ல.

கிழக்கு மாகாண தமிழர்களின் தலைவிதி என்பது முஸ்லீம் அரசியல் தலைமைகள், முஸ்லீம் அடிப்படைவாத அமைப்புக்களின் என்பவற்றின் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கிழக்கு தமிழர்களின் அரசியல் ஆணையைப் பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதனை   விற்று வியாபாரம் செய்திருக்கின்ற நிலையில் கிழக்கு மாகாணத்தில் அரச திணைக்களங்கள், நிறுவனங்கள், அமைப்புக்கள் என்பவற்றின் அனைத்து அதிகாரிகளும் முஸ்லீம் இனத்தவர்களால் தாராளமாக நிரப்பப்பட்டுள்ளது. காணி அபகரிப்பு, வேலைவாய்ப்பு, அபிவிருத்தி போன்ற இன்னோரன்ன  விடயங்களின் தமிழர்களும், தமிழ்ப் பிரதேசங்களும் வெளிப்படையாகவே புறக்கணிக்கப்பட்டு வருகின்றது. இதற்கு சிறந்த உதாரணமாக நகர திட்டமிடல் தொடர்பான அபிவிருத்திக்கு அமைச்சர் ரகுஹக்கீம் அவர்களால் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு பெருமளவான நிதி காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, வாழைச்சேனை ( முஸ்லீம் பகுதிகள்) போன்ற முஸ்லீம் பிரதேசங்களுக்கு மாத்திரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அபிவிருத்திப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது கிழக்கு மாகாண முதலமைத்சரின் நேரடி நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே நடைபெற்று வருகின்றது என்பது முக்கிய விடயமாகும்.  இது ஒரு சிறு உதாரணம் மாத்திரமே.

இந்த சவாலான சூழ்நிலையில்தான் கிழக்குத் தமிழர்களின் இருப்பும், எதிர்காலமும் தொடர்பான அச்சமான உணர்வு நிலையும், அதனை எதிர்கொள்வதற்கான மூல உபாயங்கள் தொடர்பான தேடல்களும் கிழக்கு தமிழ் உணர்வாளர்களிடையே வலுப்பெற்று வருகின்றது. இது முஸ்லீங்களுடனான மோதலுக்கான முனைப்பாக இல்லாமல் தமிழ்தேசியத்தை பாதுகாக்கும் தற்பாதுகாப்பு முயற்சி என்பதனை திரு.சண் தவராஜா போன்ற ஊடக நண்பர்கள் புரிந்துகொள்ள வேண்டும். தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான அனைத்து அடிப்படை உரிமங்களும் தமிழர்களுக்கு உள்ளது.  தமிழர்கள் பெளத்த பேரினவாதிகளுடன் கைகோர்த்தாலென்ன பாகிஸ்தானுடன் கைகோர்த்தாலென்ன தமிழ் தேதியம் கார்த்து இரட்சிக்கப்படுமாயின் எதிரிகளும் எங்களுக்கு இரட்சகர்களே.

தொடரும்.............

போரில் மகிந்தா வெற்றி அரசியலில் மைத்திரி வெற்றி

Read More